• Mon. Jan 26th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய குடியரசு தின கொண்டாட்டம் உலகின் பிற நாடுகளை விட எவ்வாறு தனித்து நிற்கிறது?

Byadmin

Jan 26, 2026


குடியரசு தின விழா, இந்தியா

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, குடியரசு தின அணிவகுப்பு இந்தியாவின் கலாச்சாரம், சாதனைகள் மற்றும் ராணுவ வலிமையின் காட்சிப்படுத்தலாகும்.

    • எழுதியவர், நிகிதா யாதவ்

இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை இன்று (ஜனவரி 26) கொண்டாடுகிறது.

இந்நாளில் தான் இந்தியா தனது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, காலனித்துவ கடந்த காலத்திலிருந்து விடுபட்டு, அதிகாரப்பூர்வமாக ஒரு குடியரசாக மாறியது.

டெல்லியில் ஆண்டுதோறும் நடக்கும் பிரமாண்ட அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், ராணுவ டாங்கிகள் அணிவகுத்துச் செல்ல, போர் விமானங்கள் வானில் சாகசங்களை செய்யும்.

இந்த அணிவகுப்பு ஒரு கண்கவர் நிகழ்வாகும், ஆனால் விழாவின் மிக முக்கியமான இடங்களில் அமர்ந்திருப்பவர்கள் யார் என்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டனியோ கோஸ்டா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

By admin