1
2014 முதல் 2022 வரை இந்திய சிறைச்சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 170 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகியுள்ளன.
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்ட இறுதி சிறைச்சாலை புள்ளிவிவர அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், சிறையில் 1,521 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதில் 70 சதவீதம் தற்கொலைகள் ஆகும்.
அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன. அந்த ஆண்டில் 231 பேர் உயிரிழந்தனர். இதில் 102 தற்கொலைகள்.
அதேபோல், 2022 இல்பதிவு செய்யப்பட்ட 159 இயற்கைக்கு மாறான மரணங்களில், 119 தற்கொலைகள் ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை, கைதிகளின் மனநலப் பிரச்சினைகள் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை என்றும், சிறைகளில் போதுமான மனநல மருத்துவர்கள் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.