0
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமான சேவை இன்று (27) முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் கொல்கத்தா நகரில் இருந்து சீனாவின் குவாங்சோ (Guangzhou) நகருக்கு IndiGo விமானம், இன்று அதிகாலை சென்றடைந்தது.
கடந்த 5 வருடங்களின் பின்னர் அதாவது, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் நேரடி விமான சேவையாகும்.
கொரோனா வைரஸ் தொற்றின்போது குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
மேலும், 2020இல் இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப்பகுதியில் மூண்ட கடும் சண்டையில் 20 இந்திய இராணுவ வீரர்களும் 4 சீன இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து இருநாட்டு உறவு மோசமடைந்து, விமானச் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டன.
அண்மையில் இரு நாடுகளும் உறவை மேம்படுத்த முயற்சிகளை எடுத்துள்ளன. அதன்படி, நேரடி குறித்த நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது அவற்றுள் ஒன்றாகும்.
வர்த்தக வரி காரணமாக, அமெரிக்க – இந்திய உறவு கசப்படைந்துள்ள நிலையில், இந்திய – சீன உறவு முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.