0
இந்திய – சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை, தலைநகர் புதுடில்லியில் இன்று (19) நடத்தப்படவுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், புதுடில்லியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
எல்லையில் அமைதி நீடித்தால் மட்டுமே இருதரப்பு உறவு மேம்பட முடியும் என்று அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று சந்திக்கவிருக்கிறார்.
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் இந்திய – சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை இதன்போது நடத்தப்படும்.
இந்தச் சிரமமான காலத்தில் சீனாவும் இந்தியாவும் பிரச்சினைகளைத் தாண்டி சுமுகமான உறவை நாடுவதை ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு இருதரப்பிலிருந்தும் ஆக்கபூர்வமான அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.