• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய தங்கம் – துபை தங்கம் இரண்டில் எது சிறந்தது? துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் தோன்றுவது ஏன்?

Byadmin

Feb 4, 2026


தங்கம், தரம், விலை, துபை, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா மியாபுரம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

துபையிலிருந்து உறவினர்களோ அல்லது நண்பர்களோ இந்தியாவிற்கு வரும்போது, அவர்களிடம் தங்கம் வாங்கி வரச் சொல்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

குறிப்பாக, இந்தியாவில் இருந்து வேலைக்காக துபை சென்றவர்கள் நாடு திரும்பும்போது, தங்கள் வசதிக்கு ஏற்ப தங்கம் வாங்கி வருவது பொதுவான ஒன்று.

“துபையில் தங்கம் விலை குறைவு, அது பச்சை நிறத்தில் மின்னும், தரம் நன்றாக இருக்கும்” என்று பலரும் கூறுவதுண்டு. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

உண்மையிலேயே தங்கத்தின் தரத்தில் வித்தியாசம் உள்ளதா? விலை வித்தியாசம் அவ்வளவு அதிகமாக இருக்குமா?

மறுபுறம், தற்போது இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.5 லட்சத்தைத் தாண்டிச் சென்றுவிட்டது.

By admin