• Fri. Aug 8th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய நடிகரின் கனடா உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு!

Byadmin

Aug 8, 2025


இந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு கனடாவில் சொந்தமாக ஓர் உணவகம் உள்ளது.

இந்த உணவகம் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த மாதம்தான் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது

இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கபில் சர்மா உணவகத்தில் மீண்டும் நேற்று (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin