• Thu. Feb 26th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய மக்களை வகைப்படுத்த பிரிட்டிஷாருக்கு புகைப்படங்கள் உதவியது எப்படி?

Byadmin

Feb 26, 2026


பெண் நடனக் கலைஞர்கள் அல்லது நாச் பெண்கள், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம். பம்பாயில் (தற்போது மும்பை) முதன்முதலில் ஸ்டுடியோ அமைத்த ஐரோப்பிய புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான எட்வர்ட் டௌரின்ஸ் இந்தப் புகைப் படத்தை எடுத்தார். இவர் மேற்கத்திய பார்வையாளர்களுக்காக நகரத்தைக் காட்சிப்படுத்தும் புகைப்படங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

பட மூலாதாரம், DAG

படக்குறிப்பு, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பம்பாயில் வசித்த பெண் நடனக் கலைஞர்கள் அல்லது நாச் பெண்கள். பம்பாயில் (தற்போது மும்பை) முதன்முதலில் ஸ்டுடியோ அமைத்த ஐரோப்பிய புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான எட்வர்ட் டௌரின்ஸ் இந்தப் புகைப் படத்தை எடுத்தார். இவர் மேற்கத்திய பார்வையாளர்களுக்காக நகரத்தைக் காட்சிப்படுத்தும் புகைப்படங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியாவை அறிந்துகொள்வதற்கும் வகைப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் பேரரசின் மிகவும் செல்வாக்கு மிக்க கருவிகளில் ஒன்றாகப் புகைப்படக்கலை மாறியது.

‘டைப்காஸ்டிங்: புகைப்படங்களில் இந்திய மக்கள், 1855-1920’ என்று அழைக்கப்படும் ஒரு புதிய கண்காட்சி – டெல்லியைத் தளமாகக் கொண்ட கலைக்கூடமான டிஏஜி-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது. சமூகங்களை வகைப்படுத்தவும், அடையாளங்களை நிலைநிறுத்தவும் மற்றும் இந்தியாவின் சிக்கலான சமூக வேறுபாடுகளை காலனித்துவ அரசாங்கத்திற்குப் புரியும் வகையில் மாற்றவும் கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 அரிய புகைப்படங்களை இந்த கண்காட்சி ஒன்றிணைக்கிறது.

65 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் வடகிழக்கில் உள்ள லெப்சா மற்றும் பூட்டியா சமூகங்கள் முதல் வடமேற்கில் உள்ள அப்ரிடி வரை; நீலகிரியில் உள்ள தோடாக்கள் முதல் மேற்கு இந்தியாவில் உள்ள பார்சி மற்றும் குஜராத்தி மேல்தட்டு மக்கள் வரை ஒரு விரிவான மனித புவியியலை வரைபடமாக்குகிறது.

நடனப் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் என சமூக வரிசையின் கீழ்மட்டத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் மீதும் இது தனது பார்வையைத் திருப்புகிறது.

இந்த படங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்துவது மட்டுமல்ல; அவை பன்முகத்தன்மையைச் செதுக்கின, ஓடிக்கொண்டிருக்கிற, வாழ்ந்த உண்மைகளைத் தெளிவான மற்றும் அறியக்கூடிய “வகைகளாக” மாற்றின.

By admin