• Sat. Mar 15th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்கர்களுக்கே சுமையாக மாறும் அபாயம்

Byadmin

Mar 15, 2025


இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் இந்திய மருந்துகளுக்கு வரி விதித்தால் அமெரிக்காவில் மருந்துகளின் விலை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது (கோப்புப் படம்)

இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார்.

இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான வரி உயர்வை நிறுத்த பியூஷ் கோயல் விரும்புகிறார்.

By admin