• Fri. Mar 14th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய மீனவர்களுக்கு எதிராக கச்சத்தீவு உற்சவத்தை புறக்கணிக்க இலங்கையில் தீர்மானம்

Byadmin

Mar 13, 2025


இலங்கை, மீனவர்கள்

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் பிரச்னை வலுப் பெற்றுள்ள பின்னணியில், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை தரப்பு முன்னெடுத்துள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை(மார்ச் 14) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 15) நடைபெற உள்ளது.

இந்த நிலைமையில், இந்த முறை நடைபெறுகின்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தில் தாங்கள் பங்கேற்க போவதில்லை என யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கண்டித்து இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செல்லத்துரை நட்குணம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

By admin