• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

இந்திய ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் போதுமானதா?

Byadmin

Feb 2, 2026


மத்திய பட்ஜெட், ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு, இந்தியா - பாகிஸ்தான் - சீனா ராணுவ பட்ஜெட் ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரும் நிதியாண்டில் பாதுகாப்பு பட்ஜெட் ரூ. 7.84 லட்சம் கோடியாக உள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை மக்களவையில் 2026-27 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் சுமார் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.6,81,210 கோடியாக இருந்தது, அதே சமயம் வரும் பட்ஜெட்டில் இது ரூ.7,84,678 கோடியாக உள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட தகவல்படி, வரவிருக்கும் பட்ஜெட் உயர்வின் நோக்கம் நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த வளப் பயன்பாட்டிற்காக கொள்முதல் முறையை எளிதாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதாகும்.

பாதுகாப்பு பட்ஜெட்டில் எந்தப் பிரிவில் எவ்வளவு தொகை?

மத்திய பட்ஜெட், ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு, இந்தியா - பாகிஸ்தான் - சீனா ராணுவ பட்ஜெட் ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூலதனச் செலவினத்திற்கான ஒதுக்கீடு கணிசமான உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பட்ஜெட்டின் கீழ் வரும் ‘மூலதனச் செலவினம்’ (Capital Outlay) அதிகபட்சமாக 21.84 சதவீத உயர்வு கண்டுள்ளது. முன்னதாக இது ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது அது ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் கொள்முதல் இந்த மூலதனச் செலவின ஒதுக்கீட்டிலிருந்தே செய்யப்படுகிறது.

இது தவிர, பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில் 17.24 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.3.11 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது ரூ.3.65 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

By admin