• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

‘இந்திய வாக்காளர் ஆவணங்களில் இடம் பெற்ற’ பிரேசில் பெண் – வைரலானது பற்றி கூறியது என்ன?

Byadmin

Nov 8, 2025


ராகுல் காந்தி, வாக்கு, தேர்தல் ஆணையம், பாஜக

பட மூலாதாரம், Congress Party

படக்குறிப்பு, புதன்கிழமையன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில் இடம்பெற்ற லாரிசா நேரியின் புகைப்படம்

இந்தியாவில் தேர்தல் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டில் இடம் பெற்றிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அந்தப் பெண் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் லாரிசா நேரி.

இதுவரை இந்தியாவிற்கே வந்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த அந்தப் பெண், ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்றும், யாரோ குறும்பு செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்ததாகக் கூறுகிறார்.

பின்னர் அவருடைய சமூக ஊடகக் கணக்குகளில் செய்திகள் வந்து குவிந்தன, பலரும் இன்ஸ்டாகிராமில் டேக் செய்யத் தொடங்கினார்கள் என்று அவர் கூறுகிறார்.

“முதலில் அது தவறான செய்தி, என்னை வேறு யாரோ என தவறாக புரிந்துக் கொண்டார்கள் என நினைத்தேன்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“பின்னர் என் முகம் பெரிய திரையில் தோன்றும் வீடியோவை எனக்கு அனுப்பினார்கள். அப்போதும், அது செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்பட்டது அல்லது ஏதோ நகைச்சுவை என்று தோன்றியது. ஆனால் நிறைய பேர் ஒரே நேரத்தில் செய்தி அனுப்பத் தொடங்கிய பின்தான், அது விளையாட்டல்ல, உண்மை என்பதை உணர்ந்தேன்” என்கிறார் லாரிசா நேரி.

By admin