• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

இந்திய விமானங்களுக்கு ஒரே வாரத்தில் 30 வெடிகுண்டு மிரட்டல் – என்ன பாதிப்பு?

Byadmin

Oct 21, 2024


இந்திய விமானச் சேவை, போலி வெடிகுண்டு மிரட்டல், ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செப்டம்பரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பிராங்பர்ட் நோக்கிச் சென்ற விஸ்தாரா விமானம் துருக்கிக்கு திருப்பி விடப்பட்டது

சமீப நாட்களாக, இந்திய விமான நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இதனால், விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன, விமானப் பயணங்கள் தாமதமாகின்றன.

கடந்த வாரம், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, பயணிகள் கம்பளிகளைப் போர்த்திக் கொண்டு, ஏர் இந்தியா விமானத்தின் உறைந்த படிக்கட்டுகளில் இறங்குவதைக் காட்டியது. அது கனடாவில் உள்ள தொலைதூரக் குளிர் நகரமான இகலூயிட்.

முதலில் மும்பையில் இருந்து சிகாகோ செல்லும் போயிங் 777 விமானத்தில் இருந்த 211 பயணிகள், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அக்டோபர் 15-ஆம் தேதி திருப்பி விடப்பட்டனர்.

“நாங்கள் 200 பயணிகளுடன் அதிகாலை 5 மணி முதல் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் சிக்கித் தவிக்கிறோம்,” என்று ஹரித் சச்தேவா என்ற பயணி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அவர் ‘கனிவான விமான நிலைய ஊழியர்களைப்’ பாராட்டினார். ஆனால், ஏர் இந்தியா பயணிகளுக்குப் போதுமான தகவல்களைத் தெரிவிக்க முயலவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

By admin