• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய விவசாயிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ‘மாயாஜால’ சங்குப்பூ சாகுபடி

Byadmin

Jan 10, 2026


சங்குப்பூ, சங்கு புஷ்பம், நீல நிறப் பூ, கொடி, செடி, விவசாயி, விவசாயம்

பட மூலாதாரம், Impex

படக்குறிப்பு, சங்கு புஷ்பம் என்பது நீலநிறப் பூக்களைக் கொண்ட, வேகமாக வளரக்கூடிய கொடி வகைச் செடியாகும்

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தனது கிராமத்தில் சங்கு புஷ்பம் என்பது சாதாரண படரும் கொடி வகைச் செடியாகவே இருந்தது” என்கிறார் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள அந்தாய்க்லாவ் என்ற கிராமத்தில் வசிக்கும் நீலம் பிரம்மா.

சங்குப்பூ, சங்கு புஷ்பம் என்றும், ‘அபராஜிதா’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தாவரம், கொடி வகையைச் சேர்ந்தது, கண்ணைக் கவரும் நீல நிற மலர்களைக் கொண்டது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளூர் பெண்கள் இந்த மலர்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது குறித்து நீலம் பிரம்மா கேள்விப்பட்டார். இந்த மலர்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது மற்றும் நீல நிறச் சாயம் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

பிற பெண்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய அவருக்கு அது ஆக்கபூர்வமானதாக இருந்தது.

“உலர்த்தப்பட்ட மலர்களை விற்று முதல் முறையாக நான் சுமார் 4000 ரூபாய் சம்பாதித்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது வாழ்க்கையை நன்றாக வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை அது எனக்குக் கொடுத்தது,” என்கிறார் அவர்.

By admin