• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷிய ஜனாதிபதியை சந்தித்தார்!

Byadmin

Nov 19, 2025


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.

இந்நிலையில், ரஷிய ஜனாதிபதி புதினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

By admin