• Sun. Mar 30th, 2025

24×7 Live News

Apdin News

இந்திரா காந்தி ஃபெரோஸை கரம்பிடிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது ஏன்? திருமணம் எப்படி நடந்தது?

Byadmin

Mar 27, 2025


ஃபெரோஸ் - இந்திரா காந்தி திருமணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபெரோஸ் – இந்திரா காந்தி திருமணம்

தன்னுடைய மகள் இந்திராவுக்கு ஃபெரோஸ் பொருத்தமான மாப்பிள்ளை இல்லை என ஜவஹர்லால் நேரு கருதினார். ஃபெரோஸ் இந்துவோ அல்லது காஷ்மீரியோ அல்ல, ஆனால் இது நேருவுக்கு பிரச்னை அல்ல. ஏனெனில், அவருடைய உடன்பிறந்த சகோதரிகளான விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணாவின் கணவர்களும் காஷ்மீரிகள் அல்ல.

தன் சகோதரிகளின் திருமணங்களுக்கு நேரு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களின் கணவர்கள் ஆக்ஸ்ஃபோர்டில் படித்தவர்கள், பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்கள். விஜயலட்சுமியின் கணவர் ரஞ்சித் பண்டிட் ஒரு வழக்கறிஞர் (பாரிஸ்டர்) மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர்.

மற்றொருபுறம், ஃபெரோஸ் காந்தி மிகவும் எளிய பின்புலத்தில் இருந்து வந்தவர். அவர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறவும் இல்லை, வேலையும் இல்லை அல்லது வருமானத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை.

இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான ‘இந்திரா, தி லைஃப் ஆஃப் இந்திரா நேரு காந்தி’-யை எழுதியவரான காத்தரீன் ஃபிராங்க், “ஃபெரோஸ் சத்தமாக பேசுபவர், மற்றவர்களை மரியாதை குறைவாக நடத்துபவர் மற்றும் வெளிப்படையாக பேசும் ஒரு நபர் ஆவார். அதற்கு மாறாக, நேரு மிகவும் நாகரீகமாகவும் திட்டமிட்டும் பேசக்கூடியவர், அறிவார்ந்தவர்.” என குறிப்பிட்டுள்ளார்.

By admin