• Wed. Dec 25th, 2024

24×7 Live News

Apdin News

இந்திரா காந்தி: தோல்விக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட இந்திரா காந்தி- 33 மாதங்களில் மீண்டும் பிரதமரானது எப்படி?

Byadmin

Dec 25, 2024


இந்திரா காந்தி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி இந்தி

கடந்த 1977 பொதுத் தேர்தலில் தோற்ற பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து கர்நாடகாவின் சிக்காம்குளூரு தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டார். வாக்குப்பதிவு நாளன்று அப்பகுதி முழுவதும் பெருமழை பெய்தது.

அந்த நிலையிலும் நான்கில் மூன்று பங்கு வாக்காளர்கள் வாக்கு செலுத்தினர். அன்றைய தினமே இந்திரா காந்தி டெல்லி திரும்பினார்.

இரண்டு தினங்கள் கழித்து, எதிர்க்கட்சித் தலைவராக சோவியத் ஒன்றியத்தின் தேசிய தின விழாவில் கலந்துகொள்ள சோவியத் தூதரகம் சென்று கொண்டிருந்தபோது, இடைத்தேர்தலில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நான்கு நாட்கள் கழித்து, இந்திரா காந்தி லண்டன் செல்ல வேண்டியிருந்தது. சோனியா காந்தியும் அவருடன் லண்டன் சென்றார். டெல்லி திரும்புவதற்கு முன்பு இருவரும் லண்டனின் பிரபலமான ஆக்ஸ்ஃபோர்டு தெருவில் ராகுல் மற்றும் பிரியங்காவுக்காக ஷாப்பிங் சென்றனர்.

By admin