0
இந்தோனேசியாவில் காணாமல்போன கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இருப்பினும், விமானத்தில் பயணம் செய்த 11 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக தொடர்கின்றன.
மீன்பண்ணை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம், Sulawesi தீவில் உள்ள மலைப்பகுதியில் நேற்று தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் எட்டு விமானப் பணியாளர்கள் மற்றும் மூன்று அரசாங்க ஊழியர்கள் பயணம் செய்திருந்தனர்.
தொடர்புடைய செய்தி – இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் காணாமல் போனது – தேடுதல் பணிகள் தீவிரம்
சிதைவுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல்போனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சுமார் 1,200 பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு குழு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடினமான மலைப்பகுதி மற்றும் வானிலைச் சவால்களுக்கு மத்தியில் தேடுதல் பணிகள் தொடர்கின்றன.