• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

இனந்தெரியாத நபர்களால் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!

Byadmin

Apr 15, 2025


இனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.

முன்விரோதம் காரணமாக இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்படி நபரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin