3
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உருமாறும் இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், AI தொழில்நுட்பம் திரைத்துறையில் எந்த அளவிற்கு மாற்றங்களை கொண்டு வருகிறது என்பது குறித்து பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கூலி படம் வெளியான நிலையில், அதன் பிறகு முதல் முதலாக ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனால் இந்த நிகழ்ச்சியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் கூலி படம் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதற்கு லோகேஷ் பதில் அளிப்பாரா?மாட்டாரா? என்பது தான்.
கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ்
“ஒரு ரசிகரின் எதிர்பார்ப்பை நான் விமர்சிக்க முடியாது. கூலியை பொறுத்தவரை, இது Time Travel படம் அல்லது LCU என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை, ஆனால் ரசிகர்கள் அதை தான் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நான் ஒருபோதும் கதைகளை எழுத மாட்டேன்.
அது வெற்றி பெற்றால், நல்லது. இல்லையென்றால், நான் மீண்டும் முயற்சிப்பேன். எதிர்காலத்தில், அனிருத் இல்லாமல் நான் எந்த படத்தையும் இயக்க மாட்டேன்.
அவர் திரைப்பட துறையை விட்டு வெளியேறினால், வேறு வழிகளை யோசிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு!
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவர்கள் சிறுவயதிலேயே புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்து அவற்றுக்கு காப்புரிமையும் பெற்று வைத்திருக்கின்றனர். இனி வரும் காலங்களில் திரைத்துறையில் AIன் ஆதிக்கம் இருக்கும் என்பதை விட அதனுடைய உதவி அதிக அளவில் இருக்கும்.
அது ஒரு தொழில்நுட்பம். அதன் உதவியை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் என நானும் நினைக்கிறேன். அது திருப்திபடுத்துமா என்பது பயன்படுத்துபவர்கள் பொறுத்து. எந்த ஒரு தொழில்நுட்பமும் வரும் போது வெளியில் இருந்து பார்ப்போம், பிறகு அதனுடன் பழகி விடுவோம்.
இயக்குனர் வெற்றிமாறனின் கருத்து அது அவருடைய கருத்து. அதற்குள் நான் செல்லவில்லை. அவர் பல படங்களை இயக்கியவர், நான் இப்போது தான் தொடங்கி இருக்கிறேன். கூலி படத்தில் ரஜினியின் குரல் AI தொழில்நுட்பம் தான், அது போல AI ஐ பயன்படுத்தி கொள்வேன்.
இசைக்கு நான் அனிருத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். AI பயன்படுத்த தேவை இல்லை. நான் நடிக்கும் படத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது இயக்குநர் அருண் மாதேஷ் கூறுவது போல் தான் நடிப்பேன் என தெரிவித்தார்.
நன்றி : zeenews.india.com