• Wed. Mar 11th, 2026

24×7 Live News

Apdin News

இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்! | நெருக்கடியை நோக்கி நகர்கிறதா நாடு?

Byadmin

Mar 11, 2026


சில உணவு வகைகளின் விலைகள் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், இன்று (11-03-2026) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சாதாரண தேநீர் ஐந்து ரூபாவாலும் மற்றும் பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் பத்து ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்! | நெருக்கடியை நோக்கி நகர்கிறதா நாடு? appeared first on Vanakkam London.

By admin