• Thu. Apr 3rd, 2025 2:36:47 AM

24×7 Live News

Apdin News

இபிஎஃப்ஓ அலுவலகம் நடத்தும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ குறைதீர்ப்பு முகாம்: 4 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது | EPFO Office Conducts Grievance Camp

Byadmin

Mar 27, 2025


சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில், ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற குறைதீர்ப்பு முகாம் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று (மார்ச் 27) நடைபெறுகிறது.

இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.

பல்வேறு சேவைகள்: மேலும், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

இந்த முகாம் சென்னை மாவட்டத்தில், ஆஷா நிவாஸ் சமூக சேவை மையம், எண்.9, ரட்லேண்ட் கேட் 5-வது தெரு, ஸ்ரீராம்புரம், ஆயிரம் விளக்கு மேற்கு, பூம்புகார் நகர், சென்னை-6 என்ற முகவரியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், டிக்னிட்டி இன்னோவேஷன்ஸ், எண்.359, 3-வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம், சென்னை-98 என்ற முகவரியிலும் நடைபெறும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்டிமேட் ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், எண்.517-519, திருப்போரூர், கோட்டமேடு நெடுஞ்சாலை, நந்திவரம் கிராமம், கூடுவாஞ்சேரி-603 202 என்ற முகவரியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், குருஷேத்ரா பப்ளிக் பள்ளி, விஜிஎம் நகர், கோனேரிக்குப்பம் கிராமம், சண்முகா நகர், வையாவூர் சாலை, காஞ்சிபுரம்-631 501என்ற முகவரியிலும் நடைபெறும். வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 எம்.எச்.வார்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin