• Fri. Oct 4th, 2024

24×7 Live News

Apdin News

இமயமலையில் உள்ள ஒரு நதி எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அதிகரிப்பது எப்படி?

Byadmin

Oct 4, 2024


எவரெஸ்ட் சிகரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு நதியின் மண்ணரிப்பு, எவரெஸ்ட் சிகரம் கூடுதலாக 15-50 மீட்டர்கள் உயர வழிவகுத்துள்ளது என ஆய்வு கூறுகிறது

சமீபத்திய ஆராய்ச்சியின் படி, ஒரு நதி எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை அரிப்பதன் மூலமாக, அதை சற்று மேல்நோக்கி தள்ளுகிறது. இது எவரெஸ்ட் சிகரம் கூடுதலாக 15-50 மீட்டர்கள் உயர வழிவகுத்துள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.

எவரெஸ்ட் பகுதியிலிருந்து 75 கிமீ (47 மைல்) தொலைவில் உள்ள அருண் நதிப் படுகையில் ஏற்படும் நிலப்பரப்பு இழப்பின் காரணமாக, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 2 மிமீ வரை உயர்கிறது என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (University College London- யுசிஎல்) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

“இது ஒரு கப்பலில் இருந்து சரக்குகளை தூக்கி எறிவது போன்றது. அவ்வாறு செய்தால் கப்பல் இலகுவாகி, சில அடிகள் மேலே உயர்ந்து மிதக்கும். இதேபோல், மேலோடு (Crust) இலகுவாக மாறும்போது, மலைகள் சற்று உயர்ந்து மிதக்கும்.” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மற்றும் யுரேசிய தட்டுகளின் மோதலால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இமயமலை உருவானது. அவற்றின் தொடர்ச்சியான உயர்வுக்கு கண்டத்தட்டு இயக்கவியல் (plate tectonics) முக்கிய காரணமாக உள்ளது.

By admin