0
இம்மாத இறுதியில் அதாவது எதிர்வரும் 31ஆம் திகதி, சீனாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தியான்ஜினில் நடைபெறும் ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.
இதன்போது சீன ஜனாதிபதி சீ சின்பிங்கை மோடி சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் பிரதமர் மோடி, சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
ஐந்தாண்டுக்கு முன்னர் இரு நாடுகளுக்கு இடையே எல்லை மோதல்கள் இடம்பெற்றன. அதன்பின்னர் இடம்பெறும் மோடியின் சீனப் பயணத்தை நுணுக்கமாகக் கவனிப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இந்திய – சீன நாட்டு உறவை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கையாக மோடியின் பயணம் பார்க்கப்படுகிறது.