• Wed. Aug 6th, 2025

24×7 Live News

Apdin News

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் பலர் கைது!

Byadmin

Aug 6, 2025


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் 240க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கராச்சியில் இம்ரான் கானின் ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதன்போது, இம்ரான் கானின் PTI கட்சியின் ஆதரவாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர். அப்போது சில போராட்டக்காரர்கள் கலகமடக்கும் பொலிஸார் மீது கல்லெறிந்தனர்.

தொடர்புடைய செய்தி : வேறு சிறைக்கு இம்ரான்கானை மாற்ற உத்தரவு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையிலே லாகூரிலும் பேரணி நடத்தப்பட்டது.

இதயைடுத்து, தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் சிறை வைக்கப்பட்டுள்ள ராவல்பிண்டியில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

By admin