• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

இயக்கச்சியில் வெடிக்காத நிலையில் குண்டுகள்! – Vanakkam London

Byadmin

Oct 4, 2025


கிளிநொச்சி – இயக்கச்சியில் உள்ள தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இன்று 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இயக்கச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்தார்.

சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது சம்பவ இடத்திற்கு உடனடியாக மருதங்கேணி பொலிசார் விரைந்து சென்று குறித்த பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்தினர்.

நாளையதினம் நீதிமன்ற அனுமதியின் பின் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

By admin