1
விஷால் நடிப்பில் வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சேத்தன் சீனு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வள்ளுவன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் லிங்குசாமி ஆகிய இணைந்து வெளியிட்டனர்.
இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வள்ளுவன்’ எனும் திரைப்படத்தில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் பாலா ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ‘வள்ளுவன்’ என்ற டைட்டிலுக்கு கீழ் ‘இவன் சட்டத்திற்குப்புறம்பானவன்’ என்ற வாசகம் இடம் பிடித்திருப்பதால்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.