0
சூர்யா நடிப்பில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்ற ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு பிறகு அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது.
பிரபல பொலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளர்களான குனித் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ் திரைப்படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
மண் சார்ந்த படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.