• Sat. Mar 14th, 2026

24×7 Live News

Apdin News

இயக்குநர் சேரன் வெளியிட்ட நடிகர் மதுசூதனன் ராவ் நடிக்கும் ‘AD 2035’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Byadmin

Mar 14, 2026


தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் மதுசூதனன் ராவ் முதன்மையான வேடத்தில் தோன்றும் ‘AD 2035 ‘எனும் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான சேரன் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘ஆறாம் வேற்றுமை’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹரி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘AD 2035’. நடிகர் மதுசூதனன் ராவ் முதன்மையான வேடத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு கே. அறிவழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அறிவியல் புனைவு கதையாக தயாராகும் இந்த திரைப்படத்தை டீம் ஒர்க் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பிரபு தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மனித முகமும் இயந்திர மனிதனின் முகமும் சமமாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் பின்னணியில் மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட அடையாளச் சின்னங்கள் சிதைக்கப்பட்டிருப்பது போல் செதுக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

By admin