0
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி பெட் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளருமான மோகன் ஜி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் மணி பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பெட் ‘ எனும் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், தேவிப்பிரியா, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தாஜ் நூர் இசையமைத்திருக்கிறார்.
கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆஞ்சநேயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வி. விஜயகுமார் வழங்குகிறார்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.