0
‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி முன்னணி நட்சத்திர இயக்குநராக உயர்ந்திருக்கும் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றப் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிருத்விராஜ் சுகுமாறன் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு – பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பயணம் செய்பவர் என்ற பொருளை முதன்மைப்படுத்தி ‘கும்பா’ எனும் கதாபாத்திரத்தை வடிவமைத்து, அதில் நடித்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாறனின் கதாபாத்திர தோற்றப் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
ராஜமௌலி -மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் சாகசம் நிறைந்த கற்பனை உலகத்தில் ‘கும்பா’வின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.