10
போராடத் தூண்டணும்
அநீதியை சுட்டெரிக்கணும்
நீ தான் எழுத்தாளன்..கலைஞன்..
உன் எழுத்து தான் விடுதலைக் கருவி
எழுத்தால் சொறிஞ்சு கொடுக்காதே
சொற்களை மதுக்குப்பியில் நிரப்பாதே
விடுதலைக் கருவிகள் செய்
தேசத்தை விடுவிக்க…
பூ தான் நீ
உதிர்க்க நீ முனைந்தால்
உன்னுள் உறங்கும் நாகம்
தீண்ட முனையட்டும்…
உன் தாகம் தீயின் பசி
தீமைகளைக் தின்னும்
நன்மைகளுக்கு
விளக்காய் வழிநடத்தும்
நிலமிழந்து வாழ்வு பறிகொடுத்து
தேசம் தேசமா அலையும் நிகழ்காலம்
சிந்திய ரத்தங்கள் வீணா ?
தியாகங்கள் எல்லாம் விருதாவா ?
நமதாகாதா? நம்பூமி
துயர்பீறிட வலி மேவிட
இதயங்கள் உடைய
பிணங்களின் குழியிலிருந்து
கனலும் நினைவுகளுண்டு
கும்மிருட்டில் சிந்திய கண்ணீரில்
துளிர்க்கிறது
நீண்ட வேதனையின்
சின்னஞ் சிறு செடி
கனவுக்குள் ரணங்களோடு
காலம் நகர்கிறது நத்தையாய்
ஒவ்வொரு நொடிக்குள்ளும்
உருக்கொள்கிறது உயிர் வலி
உடைப்பெடுக்கின்றன தீரா வேதனை
பெருங்குரலெடுத்து அழும்…
வானத்திற்குக் கீழே
இயந்திரமல்ல நீ.
வசந்ததீபன்