தேன் ஒரு இயற்கை மருந்து என்று கூறப்படும் நிலையில், தேன் சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது.
கொதிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், வயிற்று வலி நின்று விடும் என்று கூறப்படுகிறது.
அதே போல், இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி அடுப்பில் வறுத்து, அதன் பின் ஒரு கப் தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் தேன் சாப்பிட்டால், செரிமானம் ஆகாமல் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.
மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால், வயிற்று நோய் தீரும். நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக வெட்டி, அதனை தேன், ஏலக்காய், ரோஜா இதழ் சேர்த்து, இரண்டு நாள் வெயிலில் காய வைத்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், வறட்டு இருமல் குணமாகிவிடும்.
மேலும், இளமையுடன் இருக்க விரும்புபவர்கள் தினந்தோறும் தேனை அருந்த வேண்டும். 40 வயது கடந்தவர்கள் தினமும் தேனை அருந்தலாம்.
தேன் ரெகுலராக அருந்துவதால், நரம்புகள் சுறுசுறுப்பாக இருக்கும். இரவில், தேனை படுக்க செல்லும் முன் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறிவிடும். தேனை துளசி சாற்றில் கலந்து குடித்தால், சளி, தொண்டை வீக்கம் ஆகிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
The post இயற்கை மருந்து தேன் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..! appeared first on Vanakkam London.