• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

இயற்கை -யானை- மனிதன்- இடையேயான உறவை பேசும் ‘ கும்கி 2’

Byadmin

Oct 5, 2025


புதுமுக நடிகர் மதி முதன்மையான வேடத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கும்கி 2’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2′ எனும் திரைப்படத்தின் மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பெராடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். அடர்ந்த வனத்தின் பின்னணியில் அங்குள்ள வனவிலங்கான யானைக்கும், இளைஞன் ஒருவனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தவல் காடா தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை டொக்டர் ஜெயந்தி லால் காடா வழங்குகிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்’ கும்கி’ வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது புதுமுக நடிகர் மதி கதையின் நாயகனாக நடிக்க உருவாக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை- யானை -மனிதன்- இடையேயான உறவை உணர்வுபூர்வமாக விவரிக்கும் ‘கும்கி 2’ எனும் இந்த திரைப்படத்திலும் இயக்குநர் பிரபு சாலமன் தன்னுடைய முத்திரையை பதித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

By admin