• Wed. Dec 24th, 2025

24×7 Live News

Apdin News

இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 என தீர்மானிக்கப்பட்டது எப்படி? உண்மையான தேதி என்ன?

Byadmin

Dec 24, 2025


கிறிஸ்தவம், இயேசு கிறிஸ்து, மதங்கள், வரலாறு, கிறிஸ்துமஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், பவுலா ரோசாஸ்
    • பதவி, பிபிசி உலக செய்திகள்

அது ஏப்ரல் 13 ஆக இருக்கலாம் அல்லது அக்டோபர் 14 அல்லது ஜூலை 3.

இயேசுவின் பிறந்த தேதியை தீர்மானிக்கும் பொறுப்பில் இருந்த இடைக்காலத் துறவி தவறு செய்யாமல் இருந்திருந்தால், நாம் இப்போது 2023க்கு பதிலாக 2026ஆம் ஆண்டில் இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

நாசரேத்தில், இயேசு எந்த தேதியில் பிறந்தார் என்பதை உறுதியாக அறிய முடியவில்லை. அவருடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள வரலாற்றாசிரியர்களுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் சுவிசேஷங்கள் (Gospel).

அவர் இறந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு வாழ்ந்தவர்கள், அவரை நேரில் சந்திக்காதவர்கள், இயேசுவை மெசியாவாக ஏற்று விசுவாசப் பிரசாரகர்களாக இருந்தவர்கள், இவர்களால் இந்த சுவிசேஷங்கள் எழுதப்பட்டன.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, முதல் தலைமுறை கிறிஸ்தவர்களால் சொல்லப்பட்ட அவரது கதை இரண்டாவது, மூன்றாவது அல்லது ஐந்தாவது தலைமுறைக்கு கடத்தப்பட்டு பின்னர் அது வெளியே வருகிறது.

By admin