• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

இயேசு கருமை நிறத்தில் இருந்தாரா? வரலாற்று நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

Byadmin

Apr 19, 2025


இயேசு

பட மூலாதாரம், CICERO MORAES/BBC BRAZIL

படக்குறிப்பு, முதலாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் வாழ்ந்த யூதர்கள் கருமையான தோல், முடி மற்றும் கண்களைக் கொண்டிருந்தனர் என்கிறார் சிசெரோ மோரேஸ்

நீளமான வெளிர் பழுப்பு நிற முடி, நீல நிற கண்கள் மற்றும் தாடி கொண்ட வெள்ளை நிற மனிதர் எனும் உருவ அமைப்பு கொண்டவராக இயேசு கிறிஸ்து பரவலாக அறியப்படுகிறார்.

இந்த உருவ அமைப்பு கலை மற்றும் மதம் சார்ந்த படைப்புகள் இரண்டிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் உள்ள சுமார் 2 பில்லியன் கிறிஸ்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு படமாக இருந்தாலும், இது யதார்த்தத்துடன் சிறிதும் தொடர்பில்லாத ஒரு உருவப்படமாக கருதப்படுகின்றது.

இயேசு, அவரது காலத்தின் மற்ற யூதர்களைப் போலவே, கருமையான சருமம் கொண்டவராகவும், குட்டையாகவும், தலைமுடியை வெட்டி வைத்திருந்தவராகவும் இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

By admin