0
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றி விழா – ரகசியமாகவும், எளிமையாகவும் சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான ‘தலைவன் தலைவி ‘ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
படத்தில் நிறைகள் இருந்தாலும்.. குறைகள் பெரிதாக இருந்ததால் வெற்றி கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் வணிக அழுத்தங்களால் ‘தலைவன் தலைவி ‘திரைப்படம் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதுவும் படத்தின் டிஜிட்டல் தள வெளியீடு தொடர்பான ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காகவே நடைபெற்றது.
இந்நிலையில் திரையுலக வணிகர்களிடம் இப்படத்தைப் பற்றி கேட்டால்… இந்தத் திரைப்படம் வணிக ரீதியான வெற்றி பெற்ற படம் அல்ல என உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.