23
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் பெருங்கோயிலின் 05 ஆவது திருக்குடமுழுக்கு பெருவிழா சிறப்பு நிகழ்வாக 40.01.2026 வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றமமு.
கிளிநொச்சி மண்ணின் காவல் தெய்வமான இரணைமடுவில் வீற்றிருக்கும் திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, அம்பாளின் புகழ்பாடும் பக்திப் பாடல் தொகுப்புகள் வெளியீடும் கலைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்றன.
நிகழ்வை அதிபர் பங்கயற்செல்வன் தலைமையில் நடைபெற்றது. தமிழக மற்றும் ஈழத்து புகழ்பூத்த கலைஞர்களின் பங்களிப்பில், எம் மண்ணின் கவிஞர்களின் வரிகளில் உருவாகியுள்ள “கனகாம்பிகையின் கானங்கள் – பாகம் 1 மற்றும் 2” ஆகிய இரு இசைப் பேழைகள் வெயிளிடப்பட்டன.
கனகாம்பிகையின் கானங்கள் (பாகம் 1) சிவ பத்மயன் அவர்களின் இசையில் 06பக்திப் பாடல்களும் கனகாம்பிகையின் கானங்கள் (பாகம் 2) “இசைத்தென்றல்” விமல் அவர்களின் இசையில் 07 பக்திப் பாடல்களும் இசையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
தமிழகத்தின் புகழ்பூத்த பாடகர்கள் மற்றும் ஈழத்தின் முன்னணி இசைக் கலைஞர்களின் சங்கமத்தில் உருவான பக்திப் பாமலை வெளியீடு செய்யப்பட்டது பிரதம விருந்தினராக கிளிநொச்சி அரசாஙக அதிபர் கலந்துகொண்டு முதல் பிரதியை வெளியிட்டு வைத்தார்.
பாகம் ஒன்றின் முதல் பிரதியை அதன் தயாரிப்பாளரான அப்பன் அவர்களின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். பாகம் 2 கிளிநொச்சி அரசாங்க அதிபர் வெளியீட்டு வைக்க ஆலய பரிபாலன சபை தலைவர் சிவகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் நிகழ்வில் பங்காற்றிய கலைஞர் கௌரவிப்பு இடம்பெற்றது. பாடல்கள் பற்றிய ஆய்வினை ஆசிரியர் நிசாந்தன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திரு கேதீஸ்வரன் அவர்கள் சிறப்பாக ஆற்றியிருந்தார்.










