• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கு காரணமான ஹிட்லரின் தவறுகள் – 10 கேள்வி – பதில்கள்

Byadmin

Oct 25, 2025


இரண்டாம் உலகப்போர், ஜெர்மனி, ஹிட்லர், சோவியத் ஒன்றியம், ஸ்டாலின், ஆபரேஷன் பார்பரோசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் செய்த தவறுகள் என்ன?

2021-ஆம் ஆண்டு பிபிசி தமிழில் வெளியான கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.

1941 ஜூன் 22ஆம் தேதி. நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கையான ஆபரேஷன் பார்பரோசாவைத் தொடங்கியது. அந்த நேரத்தில் சோவியத் யூனியனின் அதிகாரம் ஸ்டாலினின் கைகளில் இருந்தது.

இது வரலாற்றின் மிகப்பெரிய ராணுவத் தாக்குதல் என்று கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரை தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் அடோல்ஃப் ஹிட்லர் அந்த நேரத்தில் விளையாடிய ஓர் ஆபத்தான பந்தயம் இது.

ஆனால் ஜெர்மனியின் தலைவர் ஹிட்லர் விரும்பிய விதமாக விஷயங்கள் நடக்கவில்லை. இந்த நடவடிக்கையின் தோல்வியை, இரண்டாம் உலகப் போரின் ஒரு திருப்புமுனையாகவும், ஜெர்மன் ஆதிக்கத்தின் முடிவின் தொடக்கமாகவும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.



By admin