• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

இரண்டாவது கர்ப்பம் பெண்ணின் மூளையில் ஏற்படுத்தும் தனித்துவமான மாற்றம் என்ன? ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Mar 9, 2026


இரண்டாவது முறை கர்ப்பம் தரிப்பதால் 'கவனம் செலுத்தும் திறன் அதிகரிக்கிறது' – ஆய்வு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது முறையாக தாய்மை அடைந்தவர்களின் மூளை ஸ்கேன்கள் கவனத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான அமைப்புகளில் மாற்றங்கள் இருப்பதை காட்டின.

இரண்டாவது முறை கர்ப்பம் தரிப்பது ஒரு தாயின் மூளையை “தனித்துவமான” வழிகளில் மாற்றியமைப்பதாகவும், இது அவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுவதாகவும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

முன்பு, ஒரு பெண்ணின் மூளை முதல் கர்ப்பத்தின்போது தாய்மைக்குத் தயாராவதற்கான மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.

சமீபத்திய ஆய்வு, இலக்கு சார்ந்த கவனம் மற்றும் பணிசார்ந்த தேவைகள் உள்ள பெண்களுக்கு இரண்டாவது கர்ப்பத்தின் போது ஏற்படும் குறிப்பிட்ட சில மாற்றங்கள் உதவக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

கர்ப்ப காலத்தில் அல்லது அதற்குப் பிறகு சில பெண்கள் உளவியல் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வு முடிவுகள் உதவக்கூடும்.

பெரும்பான்மை பெண்கள் தங்களது வாழ்வில் கர்ப்ப காலத்தை அனுபவிக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 2.3 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

By admin