• Sun. Dec 28th, 2025

24×7 Live News

Apdin News

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு திமுக எதுவும் செய்யவில்லை: விவி.ராஜன் செல்லப்பா

Byadmin

Dec 28, 2025


மதுரை: ‘‘இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, ’’ என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைப்பு செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், ஒன்றிய செயலாளர் கோட்டைகாளை, பகுதி கழக செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர் .அவனியாபுரம் பகுதி செயலாளர் முருகேசன் வரவேற்றார்.

By admin