1
சனிக்கிழமை பிற்பகல் 2.47 மணிக்கு Otley வீதியில், இரண்டு பெண்கள் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாக மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதியில் துப்பாக்கி மீட்கப்பட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு பொலிஸார் கூறினர்.
ஆயுதங்களுடன் ஒரு நபர் காணப்படுவதால் Otley வீதிக்கு வருமாறு சனிக்கிழமை பிற்பகல் 2.47 மணிக்கு மேற்கு யார்க்ஷயர் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படாத காயங்களுடன் மூன்று பேரை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, இரண்டு பெண்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், மூன்றாவது, 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பாரதூரமான நிலைமை கருதி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.