• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்!

Byadmin

Feb 25, 2025


மெக்சிகோ, குவானாஹுடாட்டோ (Guanajuato) மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை (22 ) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஐவர் பெண்கள் என AFP செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அத்துடன், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

மெக்சிகோவின் செழிப்பான தொழில்துறை நகரமாகவும் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் குவானாஹுடாட்டோ நபர் உள்ளது. அதேநேரம் மெக்சிகோவில் அதிக வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகவும் குவானாஹுடாட்டோ நகர் கருதப்படுகிறது.

2006ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஒடுக்க மெக்சிகோ நாட்டு அரசாங்கம் இராணுவத்தை நகரில் களமிறக்கியது. அன்றிலிருந்து இன்றுவரை போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளில் 480,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin