0
தெற்கு ஐரோப்பா – வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், தீ விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கையும் 155ஆக அதிகரித்துள்ளது.
இரவு விடுதியில் இருந்த ஒரேயொரு வாசல் வழியாக நூற்றுக்கணக்கானோர் முண்டியடித்து வெளியேற முயன்றமையால் பலர் காயமடைந்துள்ளனர்.
தொடர்புடை செய்தி : இரவு விடுதி இசை நிகழ்ச்சியில் தீ; 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
இந்த தீ பரவல் சம்பவம் தொடர்பில் 10 பேர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரவு விடுதி இசை நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த அமைச்சின் அதிகாரிகள் உட்பட 10 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.