0
இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா ஒக்டோபர் 10 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோர் இணைந்து ஐந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் பதவியை வழங்கியுள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கே இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விமானப் படைத் துணைத் தளபதி (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யக்கோந்த மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.