• Thu. Feb 6th, 2025

24×7 Live News

Apdin News

இராணுவப்படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமனம்

Byadmin

Feb 6, 2025


மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க  இராணுவப்படைகளின்  புதிய பிரதானியாக  நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்பு மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, இராணுவப்படைகளின் துணை பிரதானியாகவும், அதற்கு முன்னர் இராணுவத் தலைமையகத்தில் பொதுப் பணியாளர் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார்.

இந்திய இராணுவ கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்லூரி ஆகியவற்றில் அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் அவர் தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர் அவர் இரண்டாவது லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டு கஜபா படைப்பிரிவில் காலாட்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அத்தோடு இராணுவ ஊடக பணிப்பாளராகவும் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

By admin