0
இங்கிலாந்து இராணுவ தளங்களை அச்சுறுத்தும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த இராணுவத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey) திங்களன்று ஆற்றிய உரையில் இந்தத் திட்டங்களை வெளியிட்டார்.
இந்தப் புதிய அதிகாரங்கள், துருப்புக்கள் விரைவான, மிகவும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க அனுமதிக்கும் நோக்கம் கொண்டவை எனக் குறிப்பிடப்படுகிறது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, வீரர்கள் எதிர்-ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தி, ட்ரோன்களைத் திசைதிருப்ப வேண்டும் அல்லது அவற்றின் ஜி.பி.எஸ் (GPS) சிக்னலைத் தடை செய்ய வேண்டும்.
அடையாளம் தெரியாத ட்ரோனை சுட்டு வீழ்த்துவது தீவிரமான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இந்த புதிய அதிகாரங்கள், இராணுவத் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், இது விமான நிலையங்கள் போன்ற சிவில் இடங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்து இத்திட்டத்தை செயலாக்க முனைகிறதாக நம்பப்படுகிறது.