• Thu. Feb 26th, 2026

24×7 Live News

Apdin News

இரானின் அணுசக்தி திட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா?

Byadmin

Feb 26, 2026


தெஹ்ரானில் உள்ள ஒரு பிரம்மாண்ட பேனர், நடான்ஸ் அணு செறிவூட்டல் நிலையத்தில் இருப்பதைப் போன்ற உயரமான உலோக மையவிலக்கு இயந்திரங்களையும் , ஜூன் 2025-ல் நடந்த 12 நாள் போரின் போது இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட விஞ்ஞானிகளையும் சித்தரிக்கும் சித்திரத்தைக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானில் உள்ள ஒரு சுவரொட்டி, யுரேனியம் செறிவூட்டும் உபகரணங்களையும், ஜூன் 2025-ல் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானிய விஞ்ஞானிகளையும் சித்தரிக்கிறது.

இரான் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக இருக்கும் வகையில் அமெரிக்கா அப்பகுதியில் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களைக் குவித்துள்ளது.

பிப்ரவரி 19 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு “அர்த்தமுள்ள ஒப்பந்தம்” எட்டப்படாவிட்டால் “மோசமான விஷயங்கள்” நடக்கும் என்று எச்சரித்தார்.

“அவர்களிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது, இது மிகவும் எளிமையானது… அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் மத்திய கிழக்கில் அமைதி நிலவ முடியாது” என்று தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அணு குண்டை உருவாக்க, தான் எப்போதும் முயன்றதில்லை என இரான் மறுக்கிறது, ஆனால் உலகின் பல்வேறு நாடுகளும், உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையும் இக்கருத்தை நம்பவில்லை.

இரானின் அணுசக்தி திட்டம் எந்த நிலையில் உள்ளது?

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்த 12 நாள் போரின் போது, முக்கிய அணுசக்தி தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரானின் அணுசக்தி திட்டத்தின் நிலை குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

By admin