• Tue. Mar 31st, 2026

24×7 Live News

Apdin News

“இரானின் எண்ணெயைக் கைப்பற்ற விரும்புகிறேன்” – கார்க் தீவு பற்றி டிரம்ப் கூறியது என்ன?

Byadmin

Mar 31, 2026


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் ஒரு உடன்பாடு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“இரானின் எண்ணெய் மீதான கட்டுப்பாட்டை கைப்பற்ற விரும்புவதாகவும், இரானின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும்” என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரான் போரில் போர்நிறுத்தம் செய்வது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய பாகிஸ்தானில் ஒருபுறம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் தரைவழித் தாக்குதலுக்காக ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கைச் சென்றடைந்துள்ளன.

இந்தச் சூழலில் ஃபைனான்சியல் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

இருப்பினும், இரானுடன் ஒரு ஒப்பந்தம் ‘மிக விரைவில்’ ஏற்படக்கூடும் என்று டிரம்ப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தப் போர் எண்ணெய் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது, ஒரே மாதத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக விலை அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 116 டாலராக உயர்ந்தது.

By admin