• Mon. Mar 9th, 2026

24×7 Live News

Apdin News

இரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயி யார்? அரசியல் பின்புலம்

Byadmin

Mar 9, 2026


மொஜ்தபா காமனெயி, இரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு

பட மூலாதாரம், Tasnim News Agency

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி, அடுத்த உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தந்தையைப் போலல்லாமல், 56 வயதான அவர் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல. அவர் ஒருபோதும் அரசாங்கப் பதவியை வகித்ததில்லை, பொது உரை அல்லது நேர்காணல்களை வழங்கியதில்லை, அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் பல ஆண்டுகளாக இரானில் திரைக்குப் பின்னால் அவர் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்ததாக வதந்திகள் உள்ளன.

2000களின் பிற்பகுதியில் அமெரிக்க இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியங்கள், அவரை “அங்கிகளுக்குப் பின்னால் உள்ள சக்தி” என்று விவரித்தன, அவர் ஆட்சிக்குள் “திறமையான மற்றும் வலிமையான” நபராக பரவலாகக் கருதப்பட்டதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயினும்கூட, அவரது தேர்வு இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். முடியாட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. அதன் சித்தாந்தம், பரம்பரை வாரிசுரிமை மூலம் அல்ல, மாறாக அவரது மத நிலைப்பாடு மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

By admin