• Wed. Mar 18th, 2026

24×7 Live News

Apdin News

இரானின் போர் பதிலடியை நிர்வகித்த லரிஜானி மரணம் – இனி என்ன நடக்கும்?

Byadmin

Mar 18, 2026


கருப்பு உடையில் அலி லாரிஜானி

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, இரான் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராக லரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், இரானிய பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி கொல்லப்பட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் இஸ்லாமிய குடியரசின் மிகவும் அனுபவம் வாய்ந்த செல்வாக்கு மிக்க கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரை இஸ்ரேல் கொன்றுள்ளது.

லரிஜானி ஒரு ராணுவத் தளபதி அல்ல, ஆனால் அவர் இரானிய அரசின் உத்தி ரீதியான முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு மையமான நபராக இருந்தார்.

தேசிய பாதுகாப்பு உயர் கவுன்சிலின் செயலாளராக, அவர் போர், ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த முடிவெடுக்கும் மையத்தில் அமர்ந்திருந்தார்.

அவரது குரல் இந்த அமைப்பு முழுவதும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இரானிய அரசின் மோதலை நிர்வகிப்பதில் அதிக மதிப்பைக் கொண்டிருந்தது.

இரானின் போர் பதிலடியை நிர்வகித்த லரிஜானி மரணம் - இனி என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 28 அன்று அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு, லரிஜானி எதிர்ப்பு தொனியை வெளிப்படுத்தினார். இரான் ஒரு நீண்ட மோதலுக்குத் தயாராக இருப்பதாக குறிப்பால் உணர்த்தினார்.

By admin